வவுனியா ஊடகவியலாளர்கள் செயலமர்வு!!


 ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று (08) வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது .

 
மாற்று கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சுதந்திர ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் மனித உரிமைகள் தொடர்பாக விஷேடமாக கவனம் செலுத்தப்பட்டது . ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் அதே விடயங்களை ஊடகவியலாளர்களும் எதிர் நோக்குவதாக செயலமர்வில் கலந்துரையாடப்பட்டிருந்தது .

ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்கள் சிவில் சமூகத்தினர் எதிர்நோக்குகின்ற விடயங்களை அவர்கள் வெளிப்படுத்தி உரிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவர்கள் அதேபோல மனித உரிமைகள் பாதுகாவலர்கள் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பக்கூடியவர்களாகவும் அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து அந்த உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் . 

இது தொடர்பாக கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது . குறித்த இரண்டு அமைப்புக்களும் எதிர்காலத்தில் இணைந்து மேற்கொள்ளத்தி்ட்டமிட்டுள்ள கணனி மயப்படுத்தப்பட்ட சேகரிப்பு அத் தகவல் சேகரிப்பு மூலம் அந்த தகவல்களை கொண்டு உரிய அதிகாரிகளுக்கு நிறுவனங்களுக்கு கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் . ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது அவர்களுக்கான பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுகின்றபோது அது தொடர்பாக பாதுகாப்பினை பெற்றுக்கொடுப்பதற்கும் செயலமர்வின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இச் செயலமர்விற்கு வளவாளர்களாக சுதந்திர ஊடக அமைப்பின் பிரதானி லசந்த மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஆலோசகர் அமீன் இசைட் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.