அம்மாவின் மனம் தொட்ட கவிதைகள்!!


தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.******

கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.*****

எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று “சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்”.*****

வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது.******

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.*****

எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீர் வேண்டும் என் தாயே.*****

கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.*****

தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட  அற்புத பிறவி  “அம்மா”.*****

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.