மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு

 


மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மதுபான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், மதுவரி ஆணையாளர் கபில குமார சிங்க தெரிவித்தார்.

இந்த விலை அதிகரிப்பு உற்பத்தி செலவீனத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மதுவரித் திணைக்களத்தின் அனுமதி அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த நிறுவனங்களினால் மதுபானங்கள் மற்றும் பியர் வகைகளின் விலைகள் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.