காட்டு யானை தாக்கி கணவன் பலி - மனைவி உயிருக்கு போராடும் நிலை!!

 


காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்பதி இலக்கான  சம்பவம்  குருணாகலில் இடம்பெற்றுள்ளது. கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்.


அம்பன்பொல வந்துருஸ்ஸ பிரதேசத்தில் விவசாய காணியை பாதுகாப்பதற்காக காவலுக்குச் சென்ற தம்பதியை காட்டு யானை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளது. திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேனை சாகுபடியை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதனை இந்த தம்பதி வழக்கமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.


கடந்த 8ஆம் திகதி காவலுக்கு சென்றிருந்த நிலையில், யானை ஒன்று துரத்திச் சென்று வெறுப்புணர்வைத் தணிக்கும் வகையில் தம்பதியினரைத் தாக்கியுள்ளது. அத்துடன் இளைஞனை தூக்கி காட்டு பகுதியில் வீசி,  பெண்ணின் முதுகு பகுதியில் காலினால்  மிதித்துள்ளதுடன், இரவு உணவிற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது.


யானையினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டிற்கு தகவல் வழங்கியுள்ளார்.


அதற்கமைய கணவன் - மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இயந்திரத்தின் உதவியுடனேயே சுவாசிப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்தில் 22 வயதுடைய ஷெஹதன் தெனெத் குமாரசிங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் 20 வயதுடைய மதுஷானி ரத்நாயக்க என்ற பெண் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.