சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் - பொன்சேகா வலியுறுத்து!!

 


நாட்டு மக்களை ஏமாற்ற பல நாடகங்களை அரங்கேற்றும் ஊழல், மோசடி மிக்க இந்தச் சர்வாதிகார அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.


"ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான் சட்டம், ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்ற பிறகு, நிச்சயம் ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டுவேன்" என்றும் அவர் சூளுரைத்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:-


"எமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படும் எனக்  கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி நிறைவேறுவதை மக்கள் விரும்புகின்றனர். எனவே, அந்த உறுதிமொழியில் இருந்து தலைவரால் பின்வாங்க முடியாது.


இவ்வாறு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்ற பிறகு நிச்சயம் ஊழலுக்கு முடிவுகட்டுவேன். இராணுவத்தில் நான் இருந்தபோது அதனைச் செய்தேன். இராணுவத்தில் 4 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட ஒரு இராணுவ அதிகாரியை வீட்டுக்கே அனுப்பினேன். எனவே, மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம்வரை நிச்சயம் கைவைப்பேன்.


முதலில் மேல் மட்டத்தில்தான் கைவைக்க வேண்டும். அப்போது கீழ்மட்டம் தானாகவே திருந்திவிடும்" - என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.