கௌரவ டேக்வாண்டோ கருப்பு பட்டியை மீளப்பெற தீர்மானம்!!

 


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது.


உலக டேக்வாண்டோ சம்மேளனம் முன்னதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு டேக்வாண்டோ விளையாட்டுக்கான கௌரவ கருப்பு பட்டியை வழங்கியிருந்தது.

எனினும், ரஷ்ய ஜனாதிபதியின் யுக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, இந்த கௌரவமான கறுப்புப் பட்டியை நீக்குவதற்கு குறித்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், ஃபிஃபா மற்றும் சர்வதேச ரக்பி யூனியன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் உறுப்புரிமையை இடைநிறுத்தி வைத்துள்ளன.

மறு அறிவித்தல் வரும் வரை அவர்களது அங்கத்துவம் இடைநிறுத்தப்படும் என சர்வதேச ரக்பி ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய மாஸ்டர் அட்டை (Mastercard) கட்டண வலையமைப்பு ரஷ்யாவில் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக மாஸ்டர் அட்டைக்கான கட்டணத் தளத்தைப் பயன்படுத்தி இனி ரஷ்யாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.