கவிஞர் வியன்சீர் அவர்களின் "அந்தரக்கிளை" கவிதை நூல் வெளியீடு!!

 


கவிஞர் வியன்சீர் அவர்களின் அந்தரக்கிளை கவிதை நூல்  30:01:2022அன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. மேனாள் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசியர் செ. யோகராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மகிழை திரு. ஹீநேசன். அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.  முதற்பிரதியை  தேசபந்து முத்துக்குமார் செல்வராசா.(மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளர்) அவர்கள் பெற்றுக்கொள்ள சிறப்புப்பிரதியை சைவப்புரவலர் - விநாயக மூர்த்தி ரஞ்சித மூர்த்தி (மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர்) அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் அறிமுகத்தினை கவிஞர் பகீரதனும்  நூல் விமர்சனம் கவிஞர் மேரா அவர்களும் நிகழ்த்தினர். அந்தரக்கிளைகள் கவிதை நூல் சமுகத்தின் எடுத்துரைப்புகளை

வரிகளினூடாக வெளிக் கொணர்ந்தும், இந்த வையகத்தின் மனித ஜீவராசிகளின் அத்தனை உணர்வுகளுக்கும்

மொத்தமாய் வகிடெடுத்துமுள்ளது எனவும் " அந்தரக்கிளைகள்"

கவிதை நூல் பிறப்பு தொடக்கம் இறப்பு வரையில் மனிதன் தன்னகத்தே காணும்

ஒவ்வொரு உணர்வுகளையும் மிகவும் துல்லியமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்தியம்பியுள்ளதோடு மிகவும் காத்திரமாவும் படைக்கப்பட்டுள்ளதோடு, மனிதனின் ஒவ்வோர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துள்ளதும்  எனவும் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.