வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் மஞ்சள் அறுவடை விழா!!

 


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி தலைமையில் நடைபெற்றது.


பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 2021 யூன் மாதம் அப்போது பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.தனபாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இவ்மஞ்சள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 


இவ்மஞ்சள் உற்பத்தி நடவடிக்கையில் பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகஸ்த்தர் ஆர்.கங்காதரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர். வேள்ட் விஷன் நிறுவனமும் மஞ்சள் நடுவதற்கான பங்களிப்பினை வழங்கியிருந்தது.


இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் சிறப்பு அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான கே.கருணாகரன் அவர்களும் கலந்துகொண்டு அறுவடை விழாவினை சிறிப்பித்திருந்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.