புலிகளின் புலனாய்வுப்பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!!

 


தங்கவேலு நிமலன்  என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இவர்,  முன்னாள் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான முத்தப்பன் என்பவரின் கீழ் பணியாற்றி இருந்தாரென காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


நிமலன்  உள்ளிட்ட சிலர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குறித்த காலத்தில் கைதுசெய்யப்பட்டனர்.


தங்கவேலு நிமலன் என்ற சந்தேகநபருக்கு எதிராக சில நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அவற்றில், 2011ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.


இதன்போது, அதிசக்தி வாய்ந்த சுமார் 2 கிலோகிராம் வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக காணப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.