பணச்சபை முறைமை அவசியம்!!

 


அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க் மிக மோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்து வருகின்றார்.ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை பணச்சபை முறைமையை ஸ்தாபிப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை முகம்கொடுத்திருக்கக் கூடிய டொலர் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் அந்த நாட்டிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்றும்    இந்த நெருக்கடியின் தீவிரத் தன்மையைக் குறைப்பதற்கு இலங்கையில் கடந்த 1884 தொடக்கம் 1950ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த பணச்சபை முறைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


 1950ஆம் ஆண்டில் பணச்சபை  நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.