டீசல் தட்டுப்பாட்டால் மணல், கல், கிரவல் விலைகள் அதிகரிப்பு!!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் டீசலில் இயங்கும் இயந்திரங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிப்பர் வாகனங்களில் செயற்பாடுகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது . மணல், கிரவல், கல் என்பனவற்றின் விலைகள் திடீரென்று அதிகரித்துள்ளது . 


நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதால் குறித்த நேரத்திற்குள் தமது வேலைகளை முடித்துக்கொள்ள முடியவில்லை நேர விரையத்தினால் குறிப்பிட்ட நேரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியவில்லை  என்று டிப்பர் சாரதிகள் தெரிவிக்கின்றனர் . 

அத்துடன் கல் உடைக்கும் இயந்திரங்கள் பைக்கோ இயந்திரங்கள் என்பன அனைத்தும் டீசலில் இயங்கி வருகின்றன . 

தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டினால் பல்வேறு இழுபறி நிலைமைகள் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன . சில வேளைகளில் கல் ,மணல், கிரவல் ஏற்றிய வாகனங்களுடன் வீதியில் டீசல் இன்றி நிறுத்திவைத்துவிட்டு வேறு ஒரு வாகனத்தில் டீசலைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது இதனால் குறித்த பொருட்களுக்கான விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது . 

இன்றையதினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்காக கான்களுடன் காத்திருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது . 

எரிபொருட்களின் தட்டுப்பாட்டினால் பல்வேறு அத்தியாவசியமான உணவு பொருட்களில் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.