அதிகரிக்கின்றது பாணின் விலை!!

 


பாண் உட்பட அனைத்து பேக்கரிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.


இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுத்தத் தீர்மானிக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவிகையில்,


"மா வழங்கும் நிறுவனங்கள் மாவின் விலையை 35 – 40 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பேக்கரிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

 

இதன்படி 450 கிலோகிராம் பாணின் விலை 20 ரூபா – 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.


கடந்த சில மாதங்களில் மட்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய காரணங்களால் மிகப்பெரும் நெருக்கடியை பேக்கரி துறை சந்தித்துள்ளது.


இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இயங்கும் 6 ஆயிரம் பேக்கரிகளில் தினசரி உற்பத்திகள் 50 வீதம்கூட இல்லை" - என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.