முதலிடம் பெற்றது தென்மராட்சி கல்வி வலயம்!!
2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை தென்மராட்சி கல்வி வலயம் விகிதாசார முறையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 978 மாணவர்களில் 860 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இவர்களில் 192பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
விகிதார அடிப்படையில் 87.93 வீதத்தை பெற்று முதலிடத்தை தென்மராட்சி வலயமும் 86.83 புள்ளி வீதம் பெற்று யாழ்ப்பாண வலயம் இரண்டாம் இடத்தையும் 84.71 புள்ளிகளுடன் வடமராட்சி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
100 புள்ளிகளுக்கு மேல் யாழ்ப்பாண கல்வி வலயம் முதலிடத்தையும் தென்மராட்சி வலயம் இரண்டாம் இடத்தையும் வடமராட்சி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை