இன்றைய உதவி வழங்கல்!!


 நோர்வேயில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர்  25 குடும்பங்களுக்கு  உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளார்.  தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா வீதம்  உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.  இவர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது மக்களுக்கான சமூகப் பணியை எப்போதும் முன்னெடுத்தவாறே வாழும் ஒருவர். விலைவாசி உயர்வினால் தற்போது அன்றாட வாழ்வை நகர்த்துவதே மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ள நிலையில் இவ்வாறான உதவிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கைகொடுக்கும் ஒன்றாக உள்ளன. ஏற்கனவே  இவர் முதியவர்களான கணவன் மனைவி இருவரும் வாழ்வதற்கான சிறந்த இல்லிடம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார். சிறிய, ஒழுக்குகள் நிறைந்த, வசதியற்ற வீட்டில் வாழ்ந்த தம்பதியரில் கணவன் நோயுற்றிருக்க, மனைவியே கூலித்தொழில் செய்து கணவனைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வதற்கே சிரமப்பட்ட நிலையில் இச்சகோதரர் உடனடியாக அவர்களின் வீட்டினைப் புனரமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.