அன்றும் இன்றும்!!

 


அன்று👉 


83 யூலையில் இனக் கலவரம் செய்தீர்கள் 


அதன் விளைவு எம் இனத்தவரின் கண்களை பிடுங்கியும் எரியும் தார் பீப்பாக்குள்ளும் உடல்களை போட்டீர்கள் 


இன்று👉 


பசிக்கலவரம் செய்கிறீர்கள் 


அதன் விளைவு சவப்பெட்டிகளை எரித்தும் நாட்டை ஆள்வோரின் கொடும்பாவிகளையும் எரிக்கின்றீர்கள் 


அன்று👉 


ஜனாதிபதியின்  புகைப்படத்தை முத்தமிட்டு ஆட்சிக்கு அழைத்தீர்கள் 


இன்று👉 


அதனை தீ மூட்டி எரித்து ஆட்சியை விட்டு போ என்கிறீர்கள் 


அன்று👉 


நாங்கள் கஞ்சிக்காக லைனில் நின்றோம் 


இன்று👉 


நீங்கள் கஞ்சி சமைப்பதற்கு ஹாஸ் சிலின்டர் வாங்க லைனில் நிற்கிறீர்கள் 


அன்று👉 


நாங்கள் இருட்டுக்குள் இடம்பெயர்ந்தோடி கிணற்றுக்குள்ளும் விழுந்தோம் 


இன்று👉 


நீங்கள் கறன்ட் இல்லையென மரம் செடிகொடி தேடி ஓடி கிடங்குக்குள் விழுகின்றீர்கள் 


அன்று👉 


நாங்கள் இறந்த உடலை புதைக்க சவப்பெட்டியில்லை என உடலை தூக்கிக்கொண்டு ஓடினோம் 


இன்று👉 


நீங்கள் சவப்பெட்டி கொண்டு செல்லும் வாகனத்துக்கு எரிபொருள் இல்லையென இறந்த உடலை தூக்கிக்கொண்டு ஓடுகிறீர்கள் 


அன்று👉 


நாங்கள் ஒரு கிலோ அரிசி 3000 என அழுதோம் 


இன்று👉 


நீங்கள் 300 ஆகப்போகுது என அழுகிறீர்கள் 


அன்று👉 


எங்கள் மருத்துவமனைகள் மீது குண்டினை போட நாங்கள் அழுதோம் 


இன்று👉 


உங்கள் நோய் தீர்க்க மருந்தில்லை என நீங்கள் அழுகின்றீர்கள் 


அன்று👉 


நாங்கள் புரட்சிப் பாடல்கள் கேட்டாலே புலனாய்வாளர்களால் விசாரிக்கப்படுவோம் 


இன்று👉 


நீங்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக இயற்றிய பாடலை கேட்டாலே அரசாங்கத்தை நக்கலடிப்பதற்காகவா கேட்கிறீர்கள் என விசாரிக்கப்படுகிறீர்கள் 


அன்று👉 


நாங்கள் கொத்துக்குண்டுக்கு பயந்து உயிரை கையில் பிடித்தபடி ஊரூராய் ஓடினோம் 


இன்று👉 


நீங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள உணவு தேடி ஊரூராய் ஓடுகிறீர்கள் 


அன்று👉 


எமக்கு எறிகணைகளாலும் துப்பாக்கி சத்தங்களாலும் காதடைத்தது 


இன்று👉 


உங்களுக்கு பசியினால் காதடைக்கிறது 


அன்று 👉 


உங்களிற்காக வானேறி வந்து எம் மண்ணில் குண்டுமழை பொழிந்து எம் சிறார்களை கொன்றழித்தனர் உக்ரேனிய விமானிகள் 


இன்று👉 


அந்த மண்ணில் ரஷ்யன் குண்டினால் இறக்கும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென  நாங்கள் மன்றாடுகின்றோம் 


எம்போதும் எம் இனம் எதை இழந்துபோனாலும் மனிதாபிமானத்தை மட்டும் இழந்து விடுவதில்லை. 


#பிரபாஅன்பு#

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.