நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

 


இலங்கை மின்சார சபை நாளைய தினம் மின் வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 

நாளை (07) காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இரண்டு வலயங்களில் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன்படி, E மற்றும் F வலையங்களில் காலை ஐந்து  மணி நேரமும் மதியம் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.


இதற்கிடையில், P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலையங்களில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் மூன்று மணி நேர மின்வெட்டு ஏற்படும்.


மேலே குறிப்பிடப்பட்ட 8 வலையங்களில் காலை இரண்டு மணி நேரமும், மதியம் ஒரு மணி நேரமும் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.