வகுப்பறையில் புனுகுப் பூனைகள் மீட்பு!!
இன்று காலை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் புத்தளம் ஆனந்தா தேசியப் பாடசாலை வகுப்பறையொன்றில் தாய் மற்றும் குட்டிகளுடன் மூன்று புனுகுப் பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
புனுகுப் பூனைகள் வகுப்பறையொன்றிற்குள் இருப்பதை அவதானித்த ஆசிரியரொருவர் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று குறித்த புனுகுப் பூனைகளை சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் பிடித்து புத்தளம் - செல்லக்கண்டல் வனப்பகுதியில் விடுவித்தாகவும் தெரிவித்துள்ளனர்.
இப் புனுகுப் பூனை இலங்கையில் அழிவடைந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.jpeg
)





கருத்துகள் இல்லை