வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு!!

 


முதற்தடவையாக  வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் வாக்கெடுப்பு முறைமையில் நடைபெற்றது. 


வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் நகரசபை செயலாளர் ஆர் . தயாபரன், மூன்று கிராம அலுவலகர்களின் நேரடிக்கண்காணிப்பில் 19 பேர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களினால் புதிய நிர்வாக சபைக்கு பத்து நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . 

புதிய தலைவராக மீண்டும் எஸ்.சுஜன் , செயலாளராக மீண்டும் ஆ .அம்பிகைபாகன் , பொருளாளராக மீண்டும் என்.செல்வரட்ணம் ஆகியோர் ஏகமனதாக சபை உறுப்பினர்களாக முதலில் தெரிவு செய்யப்பட்டனர் .


அதன் பின்னர் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பத்து பேரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை வாக்கெடுப்பு ஊடாக புதிய முறைமையில் முதற்தடவையாக வர்த்தகர் சங்கத்தினால் தெரிவு இடம்பெற்றது . 


சிறப்பான முறையில் இடம்பெற்ற இப்புதிய நிர்வாகசபை மூன்று வருடங்கள் செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.