வவுனியாவில் பனம் பொருள் உற்பத்தி நிலைய கட்டம் திறப்பு!!


 வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் பனம் பொருள் உற்பத்தி நிலைய கட்டடம் இன்று (05) விளையாட்டு வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனின் இணைப்பாளர் தினேசினால் திறந்து வைக்கப்பட்டது.


பராம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் கிராமங்கள் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழாக குறித்த கட்டடம் புனரமைக்கப்பட்டதுடன், கைப்பணியாளர்களிற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டவுள்ளது.


பனை அபிவிருத்தி சபையின் பறண்நட்டகல் சங்கத்தின் ஊடாக இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாஸன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.