11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

 


கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.