சுளிபுர இரட்டை கொலை;12 சந்தேக நபர்கள் பொலிஸார் கைது

 


யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியானவர்கள் 32 மற்றும் 58 வயதுடையவர்கள். தனிப்பட்ட தகராறு காரணமாக அவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.