வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்தது!


 யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் நெல்லியடி   காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.