நீ எனக்காக வரைந்த மடலின் துளிகள்!!

 


எரிமலையாய் எழுந்து

தீராத இலட்சிய தாகம் சுமந்து நின்றவனே 


எந்தன் காத்திருப்புக்கள் தொடர்வதனால்

ஈரக்காற்றோடு கலந்துவரும் இடைக்கால பாடல்

உனை நினைவூட்டிச் செல்கிறது 


அமைதியான பௌர்ணமிப் பொழுதொன்றில்

நீ எனக்காக வரைந்த மடலின்

அன்பின் துளிகளை

என் இதயக்கூட்டில் பத்திரப்படுத்தி 


மரித்துப் போகாத 

உன் நினைவுகளை சுமந்தபடி  

வாசமில்லா மலராக

முட்களோடு உறங்கி

இருளுக்குள் வாழ்கிறேன்


மண் ஈர்த்துக்கொண்ட பெரும் மழையாகவே

எனக்குள் உறைந்துவிட்டாய் 


கடலை சென்றடையும்வரை ஓய்ந்துபோகாத நதியாக


உந்தன் தாகமது தீரும்வரை

எனதுள்ளமும் நிம்மதி கொள்ளாது... 


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.