தாயக விடுதலைப் போரின் வெளிவரா வீரத் தடம்

 


   
"கடற்புலி லெப் கேணல் றோசா"

வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார்.


மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது.இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது.
     இந்த தகமைப் பரீட்சையில் அதிகூடிய  திறமையை வெளிப்படுத்தி அந்த கப்பல் விநியோக அணிக்கு பொறுப்பாளராக சிறப்பு தளபதியால் நியமிக்கப்பட்டார்.
லெப் கேணல் றோசாவாலே போராட்ட வரலாற்றில் மகளிர் அணி முதன்முதலாக வெற்றிகரமாக கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு சாதனைத் தடம் பதித்தார்.
இவருடைய திறமை பல சண்டைக்களங்களில் கடற்பரப்பில் ஈடுபடுத்தியது.
    ஒரு தொகுதி இராணுவ தளபாடங்கள் இடம்மாற்றும் நடவடிக்கை ஒன்றில்
18-04-1998 அன்று
திருமலை கடற்பரப்பில் சிறிலங்கா  கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.இவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி இவரோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீர மறவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.
உங்கள் விடுதலை வேட்கை என்றும் எங்களை வழிநடத்தி போராட்டப் பாதையில் வீறுகொண்டு பயணிக்க வழிவகுக்கும்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.