மண்ணின் மைந்தன் லெப்.கேணல் கிறேசி நினைவு நாள்!

 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு என்றும் தமிழீழ இனத்தின் வீரம் ,௨றுதி , துணிவை பறைசாற்றி நிற்கின்றது, அந்த வகையில் அதில் பங்கு கொண்டு தம்மை அர்ப்பணித்த மான மறவர்களையும் தம்முயிரை ஈய்ந்த வீரப்புதல்வர்களையும் நம் தமிழினம் வரலாற்று சக்கரத்தில் என்றும் மறக்க முடியாத பதிவாக பதித்துள்ளது, 



எனவே விடுதலை நோக்கிய வெற்றிப் பயணத்தில் பயணித்த மறவர்களின் வரிசையில் எம் மனங்களில் என்றும் அழிக்கப்படமுடியாத போர்வீரனாக திகழ்ந்தவர் தான் லெப் .கேணல் கிறேசி அண்ணா அவர்கள். அவரின் விடுதலைப் பயணத்தில்
உரம் மிக்க உறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா அவர்கள். இந்த போர்வீரர் இம்மண்ணில் மருதம், முல்லை ,பாலை , நெய்தல் ,குறிஞ்சி ௭னப்படுகின்ற ஐவகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தில் வந்து பிறந்தவர்தான் .கிறேசி அண்ணா அவர்கள்.



ம௫த நிலத்தில் வளம் நிறைந்த பூமிதான் கிளிநொச்சி , கிளிநொச்சியில் தலைசிறந்த விவசாய கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதிய௫க்கு 19 /08/1960 பிறந்தவர்தான் லெப் .கேணல் கிறேசி அண்ணா அவர்கள். அவரின் இயற் பெயர் கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை. இம்மண்ணில் தனக்குரிய நாமத்தை கிறேசி என மாற்றிக்கொண்டார் . 


துடியாடஂடமான போராளியாகவும், அவரது உடலமைப்பு எதிரியை திகைக்க வைக்ககூடிய உயரமான திடமான உருவமைப்பை கொண்டதாகவும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட , பார்வையும் கையில் துப்பாக்கியும் இடையில் பிஸ்ரலுமாக எந்த நேரமும் உசாரான போராளியாக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறமையன சிறந்த வீரனாவார். தமிழீழ மண்ணில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவம் தாக்குகின்றதோ அங்கெ கிறேசி அண்ணாவை காணலாம். அவர் மட்டும் அல்லாது அவரது அணியும் எந்நேரமும் தயார்படுத்தப்பட்டு தயார் நிலையில் நிற்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒழுக்கம் , கட்டுப்பாடு, மண்ணிற்காக தம்முயிரை மாய்க்கும் தன்மை என்பவற்றை மிகவும் கடுமையான குறிக்கோளாக நினைப்பவர் கிறேசி அண்ணா . தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும். கனன்று நிற்கும் களமுனைகளில் ஓய்வின்றி ஊணின்றி , உறக்கமின்றி, சுழன்றடித்த மிகப்பெரிய போர்வீரன்தான் கிறேசி அண்ணா.



“செய்வோம் அல்லது செத்துமடிவோம் “என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர் , சொன்னதை செய்தும் காட்டியவர். எந்நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர்
இவரின் போராட்ட வரலாற்றில் கிளிநொச்சி பிரதேசத்தில் 80 இன்நடுப்பகுதியில் தொடங்கி 90 களின் ஆரம்பம் வரைக்கும் சிறிலங்கா இராணுவத்துற்கு எதிரான அனைத்து தாக்குதலிலும் காத்திரமான பங்கை லெப் .கேணல் கிறேசி அண்ணா வகித்துள்ளார்.
சிங்கள இராணுவத்துற்கு கிறேசி என்றால் ஒரு பயம் இருக்கும். அப்படியான துணிச்சலான , துடியாட்டமான ,அர்ப்பணிப்பான ஒரு போர்வீரர்தான் கிறேசியண்ணா அவர்கள். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணி யொன்றின் பொறுப்பாளராக கலந்து கொண்டார்.திடமான
போராளிகளின் தாக்குதலினால் நிர்மூலமாக்கப்பட்டது இராணுவமுகாம், வெற்றி வாகையுடன் முகாம் திரும்பினர் அணி வீரர்கள். அதன் பின்னர் லெப் கேணல் கிறேசியண்ணா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், திறமையான வேலைத்திட்டங்களை இவரது பொறுப்பான காலங்களில் செய்தார்.




இலங்கை இராணுவத்தின௫டனான சமர்களம் முடிவடையும் நேரத்தில் , அமைதி என்ற போர்வையில் அந்நிய இராணுவத்தினர் ஆக்கிரமித்தனர் தமிழீழ மண்ணை. இந்திய இராணுவத்தின௫டனான சமர்களங்களில் கனன்றது கிறேசியண்ணாவின் துப்பாக்கி. கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த  இந்திய படைகளுக்கும் அவர்களது அடிவ௫டிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் கிறேசியண்ணா. கிளிநொச்சியில் எல்லா மூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. இவரது திறமையால் ௯லிகள் அடித்து விரட்டப்பட்டனர். 




கள முனைகளில் நேருக்கு நேர் கிறேசி அண்ணா அவர்களும் அவரது அணியினரின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத ஈ. பி ஆர் ௭ல் ௭வ் துரோகிகள் இவரது தந்தையான கணபதிப்பிள்ளை அவர்களை சுட்டு கொன்றனர். தந்தையரின் இறுதி சடங்குக்கு தனயன் வ௫வான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக்கும்பலும் காத்திருந்ததாம். எதிரியின் சதி வலையில் சிக்கக்கூடிய புலி அல்ல கிறேசி அண்ணா . மதிநுட்பமாக செயல்படும் திறமைகொண்ட வீரனை எதிரியினால் முறியடிக்க முடியவில்லை. 


தனது விடுதலை பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும் இழப்புகளையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சன் கிறேசி அண்ணா இந்தியா இராணுவசண்டையின்போது போர்வீரர்களுக்கு கானக வாழ்கை ஆரம்பமாகினது.இவ்வேளையில் அவரின் அணியில் பெண் போராளிகளும் இணைத்து கொள்ளப்பட்டனர். ஆண்களுக்கு பெண்கள் சமமானவர் என்ற தலைவரின் கூற்றிற்க்கு அமைவாக பெண்கள் அணியை வழிநடத்திய பெருமைக்குரியவர் கிரேஸி அண்ணா.

கானக வாழ்க்கையில் காசி முகாம் காலை , மாலை என பயிற்சி சத்தங்களும் கிறேசியண்ணாவின் அதட்டல் குரலுடம் கூடிய கொமாண்ட ஒலியும் முகாமில் ஒலித்து கொண்டிருக்கும். அனைவரும் உசாார்நிலையில் ஓடித்திரிவர்.
பெண்கள் அணிக்கு அவருடனான போராட்ட வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் முசல்குத்தி சமர் , புளியங்குள சமர் ௭ன மறக்க முடியாத காலங்கள் பல. இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது . இந்த போரில் மண்டைதீவு பகுதியுடாக முன்னேறி வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்சமரின் போது விழுப்புண்னைந்த கிறேசியண்ணா அவ்வேளையில் விழுப்புண் அடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளை நினைத்து துடித்தார்.


19/04/1991  அன்று மன்னார் பரப்புக்கடந்தான்  பகுதியுடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது சிங்களத்தின்   அவ் முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப்புலிகளின் அணிகளுக்கு கட்டளை தளபதியாக களமுனையில் பணியாற்றி கொண்டு இருந்தார்   கிறேசி அண்ணா. எதிரியிடம் ஒரு  அங்குல நிலமும்  பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக்கொண்டு இருந்த வேளையில் , எதிரியின் விமான தாக்குதலில் ஏவிய குண்டு சிதறினால் ஏற்பட்ட காயத்தினால்  கிறேசி அண்ணா இம் மண்ணை விட்டு  பிரிந்தார்.


திருமண பந்தத்தில் இணைந்து ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து தாய் நிலமே பெரிது ௭ன நினைத்து மாண்ட மறவர்களுடன் ஒருவனாக இணைந்து கொண்டார். தனது குடும்பம் என்ற  சிறு வட்டத்தில் நில்லாது  தமிழீழ தாயகம் ௭ன்ற பெ௫ம் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகி போன   லெப் .கேணல் கிறேசி  அண்ணா அவர்கள். அவரின் இலட்சிய பயணத்தை தொடரவர் தமிழ் இன மக்கள்.
நன்றி !
தமிழ்விழி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.