தற்கால நாழிகைகள் அறிந்தால்!!


சமீப காலமாகவே 

என் நினைவுகளை 

நீ தொடராக மீட்டுவாய்

என்றே நினைக்கிறேன் 


உன் மீட்சிகளிலே

நீ எக்களிக்கலாம்...!

நான் எண்ணற்ற 

துன்பங்களிலே

மூழ்குவதாகவோ

கண்ணீர் கடலிலே நீராடுவதாகவோ


ஏனெனில் 

என் தற்கால நாழிகைகள் 

எல்லாமே

நீ இன்றியவை அல்லவா....!


ஆனால்!

நீ அறியாமலே..........!

என்

நாழிகைகள் முழுதுமே

நலமாகவே கழிகின்றன


ஆம். .......!


துன்பங்கள் பல தூர நின்றே

எனை தீண்டிட முடியாமல்

திண்டாடுகின்றன


உன் துரோகத்தின் வலிகள் 

இதயத்திலே ஊடுருவி 

சிதைத்து விட முடியாமலே

போராடுகின்றன


நீ தந்த காயங்களின்

கண்ணீர்த்துளிகளோ

வற்றிய குளமாகி

தண்ணீர் தேடி அலைகின்றன...


என் மனதின் எண்ணங்களோ

நிஜத்தையும் நிழலலையும்

பகுத்தறியவே பழகியுள்ளன


இவையெல்லாமே

உன் துரோகத்தின் பின்னரே

அழகாக நிகழ்கின்றன


இதை நீ அறிவாயா

அறிந்தால்..........?


அப்போது 

நான் காணவேண்டுமே....!

உன் திருமுகம்


............

ரேகா . சி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.