சித்திரை வெயிலிலும் சிக்கியே தவித்தேன்!
நித்திரை இன்றியே நித்தமும்
துடித்தேன்!
சித்திரை வெயிலிலும் சிக்கியே
தவித்தேன்!
பத்தரை மணிக்குமேல் பாயினை
விரித்தேன்!
எத்திரை இட்டு என்னிருவிழி
மறைப்பேன்?
முத்திரைப் பதித்ததுன் முகமென்
நினைவினில்!
முத்தமாய்ப் பதிக்கவோ மொத்தமாய்
கனவினில்!
கனவிலே அனுமதி கேட்டவன்
நானடி!
நனவிலே உன்மொழி நான்கேடக
மாட்டேனா?
வாய்மொழி சொல்லடி வழிமொழிந்து
விடுகின்றேன்!
தாய்த்தமிழ் பாக்களால் தாலாட்டி
மகிழ்கின்றேன்!
-திருநாவுக்கரசன்
கருத்துகள் இல்லை