மருத்துநீர் வழங்கும் பணிகள் முன்னெடுப்பு!!


மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.


ஆலய உதவி வண்ணக்கர் சுவேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இன்று ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றது.


தமிழ் -சிங்கள புத்தாண்டு தினத்தில் மருத்துநீர் தேய்த்துக் குளித்து ஆலய வழிபாடுகள் முன்னெடுக்கும் வழமை இந்துக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


இதற்காக ஆலயங்களில் புத்தாண்டுக்கு முந்திய நாளில் மருத்துநீர் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.