பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு!

 


பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் (26) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் விற்பனை நிலைய உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.