வென்றது டெல்லி கெபிடல்ஸ்!


ஐ.பி.எல். ரி-20 தொடரின் 41ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்;தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ரணா 57 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் சேட்டன் சக்கரியா மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி கெபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 42 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்சிட் ரணா மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில், 4 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.