யாழ் மாநகர சபை முதல்வர் பிரான்ஸ் மாநகர சபையில் சந்திப்பு!
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பிரான்ஸ் நாட்டில் உள்ள Aubervillers மாநகர சபைக்கு விஜயம் செய்து குறித்த மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் சர்வதேச விவகார பொறுப்பாளர் ஆகியோரை நேற்று (21) சந்தித்திருந்தனர்.


இச் சந்திப்பின் போது Aubervillers மாநகர சபையின் செயற்பாடுகள், நிர்வாக அலகுகள், அவர்களுடைய அதிகார வரம்புகள் பற்றியும் கலந்துரையாடியதுடன் யாழ் மாநகர சபை மற்றும் Aubervillers மாநகர சபை ஆகிய இரண்டு சபைகளின் நிர்வாக அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.