தீவிரம் அடையும் Gota Go Home போராட்டம் - களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்!!!


நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் கைகோர்ர்த்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்தையும், ஜானாதிபதி கோட்டபாயவையும் பதவி விலகுமாறு கோரி நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் காலி முகத்திடலில் கூடாரமிட்டு ஆர்ப்பாட்டக்கரார்கள் இன்று நான்காவது தினமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ள அதேவேளை நேற்றியதினம் திருமண தம்பதிகளும் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

அத்துடன் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் கோட்டா கோ கோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளும் தற்போது இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

அதேவேளை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இசைக்கலைஞர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.