பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!


 "இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்."


- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-


"இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் - சிங்களப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துககொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.


துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும்.


விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக - கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தமிழ் - சிங்கள ஆதிக்குடிகளின் தொன்மைவாய்ந்த மரபுகளை நினைவுபடுத்துகின்றது.


புதிதாகப் பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.


இந்தச் சவால் மிகுந்த காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக நாம் அனைவரும் முகங்கொடுத்த, கொடுத்துவரும் துன்பங்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்குத் தேவையான எதிர்கால திட்டங்களை அரசு ஏற்கனவே செயற்படுத்தி வருகின்றது.


உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமையப் பிரார்த்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" - என்றுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.