முகம் சுழிக்க வைத்த காதல் ஜோடியின் செயல்!


இந்தியாவின் கர்நாடகவிலுள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை (தாலுகா) டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திடீரென அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் அமர்ந்தார்.

அவர் முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார்.

அந்நிலையில் காதலன், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர்.

இருப்பினும் அந்த காதல் ஜோடி தங்களை மறந்து உல்லாச வானில் பறந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.