இப்படியும் ஏமாற்றப்படுகிறார்கள் மக்கள் - யாழில் சம்பவம்!


யாழில் வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்மணி அவ்விடத்தில் நின்ற போது , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வாழை இலைகள் சிலவற்றுடன் வந்த இருவர் , அப்பகுதியில் சாத்திரம் சொல்பவர் எவரேனும் உண்டா என கேட்டுள்ளனர்.

அதற்க்கு பெண்மணி விலாசம் சொல்ல முற்பட்ட போது , மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் இருந்தவர் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவரும் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களால் அறுக்கப்பட்ட தங்க சங்கிலி 2 பவுண் என பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.