யாழில் கோர விபத்து - ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய ரக கெப் வாகனம் ஒன்று மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
44 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் குறித்த விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய ரக கெப் வாகனம் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை