கோட்டா கோ கிராமம் கூகுளில்!!
காலி முகத்திடலில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆச்சரியம் என்வென்றால் கூகுள் வழிகாட்டலிலும் அந்தப் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலி முகத்திடல் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த கூடாரங்கள் அமைந்துள்ள பகுதிக்கே இவ்வாறு ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிக்கு இன்றைய தினமும் பலர் வந்து, கோட்டா வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை