இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

 


சுமார் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


நேற்று (08) காலை தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் படகொன்றில் இருந்து குறித்த ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 76 இலட்சம் ரூபா என நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.