எமக்கு கண்ணீரை தந்தது யார்...?


எங்களது தறப்பாள் கொட்டில்களைவிட உங்களது தறப்பாள் கொட்டில்கள் அழகாக இருக்கிறது. 


எங்களுக்கு அன்று மரணபயம் இருந்தது.தறப்பாளினை பிரித்துக்கொண்டு வந்து ரவையும் உடலில் ஏறும்,செல் துண்டுகளும் உடலில் ஏறும். 


பல்குழல் எறிகணைபட்டு தறப்பாளும் உருகி எரியும் 


அன்று எமக்கு சாப்பிடுவதற்கு உணவு இருக்கவில்லை.இரண்டு நாட்களானாலும் பச்சைத்தண்ணீர்தான் வயிறு நிரப்புவதற்கு உதவும். 


சதுப்பு நிலத்தில் படுத்து ஊறித்தான் எழுந்திருப்போம். 


இன்று உங்களுக்கு அழகழகான தறப்பாள் கொட்டில்கள்,நிறைவான உணவுகள்,மலசலகூட வசதிகள் என்று எல்லாமே ஆர்ப்பாட்டத்திடலில் போதுமான அளவு கிடைக்கிறது. 


உங்கள் தறப்பாள் கொட்டில்களின் மேல் விமானம் வந்து குண்டு போடாது.செல் வந்து விழாது,ரவை தறப்பாளை துளைக்காது. 


அத்தோடு பெரிதாக நீங்கள் காணாமலும் போகமாட்டீர்கள். 


எந்த பயமும் இன்றி நீங்கள் கோசமெழுப்பலாம்.... 


எங்களுக்கும் சேர்த்து நீங்கள் கோசமெழுப்பும் போதும்கூட நாம் கல்லாகத்தானே இருக்கிறோம் 


அப்படியாயின் எங்கள் மனங்களை கல்லாக்கியது யார்..? 


எங்களை அழவைத்து எமது கண்ணீரை வற்றப்பண்ணியது யார்..? 


எங்கள் மகிழ்வான வாழ்வை காணாமல்போகச் செய்தவர் யார்...? 


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.