நாமலை பிரதமராக்க திட்டம்

 


சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான பிரேரணை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மஹிந்த பதவி விலகினால், அந்த பதவிக்கு தகுதியானவர் நாமல் ராஜபக்ஷ மாத்திரமே என அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் குழுவொன்று நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு சமூக ஊடகங்களில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்க பிரதமரின் ஊடகப் பிரிவு, நெருங்கிய ஊடகவியலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.