இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகள் – நிர்மலா சீதாராமன்!


இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் சென்றுள்ளார்.

இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா அதன் பெரும்பாலான இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடு இன்னொரு அண்டை அண்டை நாட்டுடன் கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், அவ்விரு நாடுகளுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறத்திய அவர், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா நட்புடன் இருக்க விரும்புகிறது. ஆனால் ஒரு பலவீனமான நிலையில் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.