இலங்கையருக்கு ஒலிவர் விருது!!

 


2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ ( Life of Pi ) நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.

புக்கர் பரிசு பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட லைஃப் ஆஃப் பை ( Life of Pi ) சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளைப் பெற்றது.

நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், நாடகத்தில் புலியாக நடித்த 7 ஏனைய நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.

இது குறித்து விருது பெற்ற ஹிரன் அபேசேகர “ சிறந்த நடிகர் விருதை வெல்வதற்கு நான் அதிகமாக பாடுபட்டுள்ளேன்.

இந்த விருதை எனது தாய்நாடான இலங்கைக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது நாடு தற்போது கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கின்றது.

நான் இந்த தருணத்தில் இலங்கையர்களை நினைவுகூருகின்றேன் அத்துடன் உங்களுடன் துணையாக இருக்க விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.