சர்ச்சைக்கு மத்தியிலும் நாடாளுமன்றம் வந்த பசில்!


முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்று அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முன்னதாக, பசில் ராஜபக்ஷ கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

எனினும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. அதோடு பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சை செய்திகளுக்கு மத்தியிலும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.