நடிகை ரம்யா கிருஷ்ணன் டுபாய் அரசாங்கத்தின் கௌரவம்!!

 


நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவப்படுத்தியுள்ளது.

‘கோல்டன் விசா’ என்பது, நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். 5 முதல் 10 ஆண்டுகள் வரை இந்த விசா மூலம் துபாய்க்கு சென்று வரலாம். மேலும், இந்த விசாவை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இந்த ‘கோல்டன் விசா’வை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த விசா நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. அது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.