மன்னிப்பு கோரிய பாடகி!!

 


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமைக்கு தான் பாடிய “ஆயுபோவேவா” பாடல் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருந்தால், அதற்காக சகலரிடமும் மன்னிப்பு கோருவதாக அந்த பாடலை பாடிய சஹேலி கமகே தெரிவித்துள்ளார்.


தான் அந்த பாடலை கலைக்காக பாடிய பாடல் மாத்திரமே எனவும் அந்த பாடலை பாடிய குறித்து மிகவும் மனம் வருந்துவதாகவும் சஹேலி கமகே கூறியுள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த பாடல் காரணமாக அப்போது இளம் யுவதியாக இருந்த நான், எதிர்நோக்கிய அவமதிப்புகள், அசௌரியங்களுக்கு முடிவு இல்லை. தற்போதும் அவை அப்படியே உள்ளன.


எனது தாய் நாட்டை நான் மிகவும் நேசித்தாலும் தற்போது நான் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றேன். இந்த பாடல் காரணமாகவே ஒரு பாடகியாகவும் மருத்துவராகவும் எனது பங்களிப்பை எனது நாட்டுக்கு வழங்க முடியாமல் போனது. இது இன்றும் என்னால், தாங்கிக்கொள்ள முடியாத வேதனை.


வெளிநாட்டில் இருந்தாலும் இலங்கையர்களான உங்களது போராட்டத்திற்கு மனபூர்வமான ஆதரவை வழங்குகிறேன். இன்றும் நாளையும் எனது தாய் நாட்டின் நலனுக்காக நடத்தப்படும் எந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் அதற்கு அச்சமின்றி எனது பங்களிப்பை வழங்குவேன்.


எனது தாய் நாடு வெல்லட்டும். உங்கள் அனைவரும் வெற்றி கிட்டட்டும். பிறந்துள்ள இந்த புத்தாண்டு உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மகிழ்ச்சி நிறைந்த அதிஷ்டமான யுகத்தின் ஆரம்பமாக இருக்கட்டும் என சஹேலி கமகே தனது பதிவில் கூறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மஹாராஜன் என்று புகழ்ந்து பாடுவதாக ஆயுபோவேவா பாடல் வரிகள் எழுதப்பட்ருந்ததுடன்  மகிந்த ராஜபக்ச இந்தப் பாடலைப் பாடிய, சஹேலி கமகேவின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டி அதனைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.