அரசு விழாவாகிறது கருணாநிதியின் பிறந்தநாள்!!


 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் கூறினார்.

அவருடைய பிறந்த தினமான ஜுன் மாதம் 3 ஆம் திகதி இனி அரசு விழாவாக கொண்டாப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.