தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!!

 


தற்போதைய நாட்டுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் பாடசாலையின் கற்பித்தல் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால்  அதிகரித்த தான்தோன்றித் தனமான முடிவை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

மேற்படி  சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு கோரி  16 ஆசிரிய அதிபர் சங்கங்களின் கூட்டமைப்பு  கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளது.


சவாலுக்குரிய காலப் பகுதிகளில் கூட  பாடத்திட்டத்தை முடிப்பதற்கும், பரீட்சைகளை நடாத்துவதற்கும் இரவு பகலாக ஆசிரியர்கள் மேலதிக கொடுப்பனவுகளைப் பெறாது பணியாற்றி வந்துள்ளனர். அவ்வாறே கொரோனா காலப் பகுதியில் ஆசிரியர்கள் சுயாதீனமாக தமது கற்பித்தலை மோற்கொண்டனர்.ஏனைய காலங்களில் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் அதிபர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, இம் முறையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்காது, நேர அதிகரிப்பு தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு கூட்டமைப்பாக வேண்டுகோள் விடுக்கிறோம் என கடிதததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியவசிய பொருள்களுக்கான நீண்ட வரிசை, உணவுத் தட்டுப்பாடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை, போன்ற காரணங்களால்  ஆகாரமின்றி  மாணவர்கள் காலை 7.30 முதல் 2.30 வரை கற்பிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.