புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி - இருவர் காயம்!


 பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் புகையிர கடவை பகுதியில் வைத்து நேற்று இரவு கார் புகையிரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


கட்டுகஸ்தோட்ட பகுதியில் இருந்து கெலிஒயா நகரில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு வந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் காரில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இந்த விபத்து ஏற்ப்பட்டது.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உற்பட்ட மூவர், பேராதெனிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற பின் அதில் 56 வயதான தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரவு நேரங்களில் புகையிரத கடவையில் பாதுகாப்புக்கு யாரும் இல்லாத காரணமாகவே இந்த விபத்து ஏற்படுவதாக அந்த பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பேராதெணிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-நிருபர் ராஜ்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.