ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை குறித்து வாசுதேவ எம்.பி. வெளியிட்ட விடயம்

 


ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை நிர்ப்பந்திப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.