செல்பி மோகத்தால் சிதறி மரணித்த இளைஞர்கள்!!

 


ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் செல்பி மோகத்தால் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது. சென்னை, சிங்கப்பெருமாள் கோவில் அருகே அசோக், மோகன், பிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.


ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டே செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி மூன்று சென்னை இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துண்டு துண்டாக உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்பி வீடியோக்களை பதிவு செய்தனர். வீடியோக்களை பதிவு செய்யும் ஆர்வத்தில் ரயில் வருவதை அந்த இளைஞர்கள் கவனிக்கவில்லை.


இந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற  ரயில் மூன்று இளைஞர்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு துண்டு துண்டாக உடல் சிதறி உயிரிழந்தனர்.


 தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூன்று இளைஞர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த மரணங்கள் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. பலியான மூன்று இளைஞர்களில் அசோக்கிற்கு மட்டும் திருமணமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.